/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டின் முன் பற்றியெரிந்த 'இன்வெர்ட்டரால்' பீதி
/
வீட்டின் முன் பற்றியெரிந்த 'இன்வெர்ட்டரால்' பீதி
ADDED : செப் 01, 2025 01:15 AM

அம்பத்துார்:அம்பத்துார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில், அம்பத்துார், மண்ணுார்பேட்டை, அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், படிக்கட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த இன்வெர்ட்டர், திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால், வீட்டில் இருந்தவர்கள் விட்டு வெளியேற முடியாமல் தவித்து அலறினர். அக்கம்பக்கத்தினர், அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார் விசாரணையில், காற்றுடன் கூடிய மழையால், மின்வினியோகம் சீரற்று இருந்ததே, விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது.