/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்ப அடி பாகம் சேதமடைந்ததால் பீதி
/
மின் கம்ப அடி பாகம் சேதமடைந்ததால் பீதி
ADDED : ஜன 18, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார் அடுத்த பட்டரவாக்கம், ஆவின் பால்பண்ணை சாலையில் உள்ள மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, கம்பிகளால் நிற்கிறது. அதற்கு, மற்றொரு கம்பத்தால், 'முட்டு' கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில், எந்த நேரத்திலும் முறிந்து விழும், ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு ஆளாகி, கடந்து செல்கின்றனர். மின் கம்பம் விழுந்து விபத்து ஏற்படும் முன், அக்கம்பத்தை அகற்றி புது கம்பம் நட வேண்டும்.
-ரமேஷ், 48, அம்பத்துார்.