/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
6வது முறையாக பள்ளம் கருக்கு சாலையில் பீதி
/
6வது முறையாக பள்ளம் கருக்கு சாலையில் பீதி
ADDED : ஜன 27, 2026 05:37 AM

அம்பத்துார்: அம்பத்துார் கருக்கு பிரதான சாலையில், ஆறாவது முறையாக திடீரென ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால், வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.
அம்பத்துார், மேனாம்பேடு, கருக்கு பிரதான சாலையில், கடந்தாண்டு ஆக., - செப்., - டிச., மாதங்களில் தலா ஒரு முறையும், அக்டோபரில் இரு முறையும் ராட்சத பள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில், அக்., மாதம் பள்ளம் விழுந்த கருக்கு ஆலமரம் அருகே, நேற்று மீண்டும், 15 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழத்திற்கு, திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் கனரக வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள், மெட்ரோ ஊழியர்களுடன் சேர்ந்து ராட்சத பள்ளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையில் பள்ளம் விழுந்ததாக கூறப்படும் நிலையில், கருக்கு பிரதான சாலையில், திடீரென ராட்சத பள்ளங்கள் விழுவது தொடர்கதையாகி வருவது, வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

