/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பில்லாத மின்பெட்டியால் பீதி
/
பராமரிப்பில்லாத மின்பெட்டியால் பீதி
ADDED : ஜன 21, 2025 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், பழைய எம்.ஜி.ஆர்., நகர் பிரதான சாலையில், மழைநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடிகால் பணிக்காக அகற்றப்பட்ட மின்பெட்டி, மின் ஒயர்கள் இணைத்தபடியாக, பிடிமானமின்றி சிறுவர்கள் தொடும் அளவிற்கு பாதுகாப்பின்றி உள்ளது. அங்கு சுற்றித்திரியும், ஆடு, மாடு, நாய், கோழி போன்றவை, அந்த மின்பெட்டி அருகே செல்வதால், விபத்து அச்சம் நிலவி வருகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?
- சசிகுமார், திருவொற்றியூர்.

