/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாரா ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி தமிழக வீரர் - -- வீராங்கனையர் அசத்தல்

ADDED : டிச 15, 2024 07:41 PM

சென்னை:மெட்ராஸ் சென்னா பாட்னா சுழற் சங்கம் சார்பில், தேசிய ஓபன் பாரா டேபிள் டென்னிஸ் போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் நடந்தது. 'சீசன் - 3' தொடருக்கான இப்போட்டி, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டது.
போட்டியில், நாடு முழுதும் இருந்து, 125 பேர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதில், வீல் சேரில் இருப்போர், நிற்க இயலாமை உள்ளிட்ட 12 வகையாக பிரிக்கப்பட்டு ஒன்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் இருபாலருக்கும் நடந்தன.
அதில், தமிழக வீரர்கள் அவினேஷ், மதன், ரவி அரவிந்த் ஆகியோர் வீல்சேர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதலிடங்களை பிடித்தனர். அதேபோல், பெண்கள் பிரிவில், கர்நாடகாவின் பெல்காம் வீராங்கனை சவீதா ஆகியோர் முதலிடத்தை பிடித்த வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.