/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய பெற்றோருக்கு 'போக்சோ'
/
மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய பெற்றோருக்கு 'போக்சோ'
மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய பெற்றோருக்கு 'போக்சோ'
மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய பெற்றோருக்கு 'போக்சோ'
ADDED : ஜன 17, 2025 12:36 AM
சென்னை, சென்னை, மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், மயிலாப்பூரைச் சேர்ந்த தம்பதி, அவர்களது 16 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதோடு மட்டுமல்லாமல், பணத்திற்காக வீடியோ பதிவு செய்து பலருக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
சிறுமியின் பெற்றோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, அவர்களது மொபைல் போனை ஆய்வு செய்தபோது, நுாற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் இருவரையும் கைது செய்தனர். அவர்களுடன், தாம்பரம் மற்றும் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என, பட்டியல் தயாரித்து, கைது நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், 'சிறுமியின் தாய் சில மாதங்களுக்கு முன், 'ஸ்பா' எனும் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு வரும் வாடிக்கையாளர்களின் இச்சைக்கு மகளை விருந்தாக்கி, சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல், அதை வீடியோ பதிவு செய்து பணத்திற்காக விற்றும் வந்துள்ளார்' என்றனர்.