/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2ம் கட்ட ' மெட்ரோ ' வில் பன்னடுக்கு ' பார்க்கிங் '
/
2ம் கட்ட ' மெட்ரோ ' வில் பன்னடுக்கு ' பார்க்கிங் '
2ம் கட்ட ' மெட்ரோ ' வில் பன்னடுக்கு ' பார்க்கிங் '
2ம் கட்ட ' மெட்ரோ ' வில் பன்னடுக்கு ' பார்க்கிங் '
ADDED : ஜன 29, 2025 12:36 AM
சென்னை, சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 2028ல் முடியுமென மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேலும் கூறியுள்ளதாவது:
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வந்த பின் மாநகரின் முக்கிய பகுதிகளுக்கு, 40 நிமிடங்களில் செல்ல முடியும். முதல்கட்ட மெட்ரோவில் போதிய அளவில் வாகன நிறுத்த வசதி இல்லாதது குறித்து தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
அதனால், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், நிலையங்களில் இருக்கும் வாகன நிறுத்த இடங்களை தவிர, அருகில் இருக்கும் இடங்களையும் வாங்கி, கூடுதலாக வாகன நிறுத்தும் வசதி செய்ய உள்ளோம்.
தவிர, மாதவரம், போரூர், பூந்தமல்லி, மயிலாப்பூர், சோழிங்கநல்லுார், மேடவாக்கம், கோயம்பேடு, சிறுசேரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதியை கொண்டுவர உள்ளோம். இதற்கான, கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

