/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகை பரப்பும் வாகனங்கள் நிறுத்திவைப்பு: அடையாறில் கொசு உற்பத்தி அதிகரிப்பு
/
புகை பரப்பும் வாகனங்கள் நிறுத்திவைப்பு: அடையாறில் கொசு உற்பத்தி அதிகரிப்பு
புகை பரப்பும் வாகனங்கள் நிறுத்திவைப்பு: அடையாறில் கொசு உற்பத்தி அதிகரிப்பு
புகை பரப்பும் வாகனங்கள் நிறுத்திவைப்பு: அடையாறில் கொசு உற்பத்தி அதிகரிப்பு
UPDATED : டிச 25, 2025 08:01 AM
ADDED : டிச 25, 2025 05:15 AM
அடையாறு: அடையாறு மண்டலத்தில், 13 வார்டுகள் உள்ளன. அடையாறு ஆறு, பகிங்ஹாம் மற்றும் வீராங்கால் கால்வாய்களின் கரையோரம் உள்ள குடியிருப்புகளில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது.
அடையாறு ஆறு அருகில் உள்ள பசுமைவழி சாலையில் அமைச்சர்கள், நீதிபதிகள் குடியிருப்புகள் உள்ளன.
ஒவ்வொரு வீடும், 1 முதல் 1.50 ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கும் கொசு உற்பத்தி அதிகரித்து, அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடையாறு மண்டலத்தில் எட்டு புகை பரப்பும் வாகனங்கள் உள்ளன.
அதில் இரண்டு வாகனங்களை இயக்குவதில்லை. ஆறு வாகனங்கள், 13 வார்டுகளுக்கு சுழற்சி முறையில் பிரித்து அனுப்பப்படும்.
ஒரு வாரமாக, ஆறு கொசு ஒழிப்பு புகை பரப்பும் வாகனங்களையும், வார்டுகளுக்கு அனுப்பவில்லை.
இதனால், மண்டலத்தில் கொசு உற்பத்தி அதிகரித்து, மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. புகை பரப்பும் வாகனங்கள் இயக்கும் பணி, ஒப்பந்த நிறுவனத்திடம் தரப்பட்டுள்ளது.
மருந்து, டீசல் கொள்முதல், ஓட்டுநர்கள் நியமனம் போன்ற பணிகளில், சுகாதார துறைக்கும், ஒப்பந்த நிறுவனத்திற்கும் இடையே பனிப்போர் நிலவுவதால், ஒப்பந்த நிறுவனம் வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. மாநகராட்சி உயர் அதிகாரிகள் தலையிட்டு, கொசு ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
அடையாறு மண்டல பூச்சியியல் வல்லுநர் பொற்கொடி கூறியதாவது:
மெக்கானிக்கல் துறையில் இருந்து புகை பரப்பும் வாகனங்கள் அனுப்பி வைத்தனர். தாமோதரன் என்ற ஒப்பந்த நிறுவனம், ஒரு வாரமாக வாகனங்களை அனுப்பவில்லை.
நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

