/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மத மோதல்கள் ஏதுமில்லை'
/
'பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மத மோதல்கள் ஏதுமில்லை'
'பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மத மோதல்கள் ஏதுமில்லை'
'பா.ஜ., ஆளும் மாநிலங்களில் மத மோதல்கள் ஏதுமில்லை'
ADDED : டிச 25, 2025 05:17 AM
திருவொற்றியூர்: ''பா.ஜ., கூட்டணி ஆளும் மாநிலங்களில், மத மோதல்கள், ஜாதி பிரச்னை ஏதும் இல்லை,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் கூறினார்.
மறை ந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தையொட்டி, திருவொற்றியூர், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், 7வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் ஏற்பாட்டில் நேற்று, 15க்கும் மேற்பட்ட இடங்களில், 2,500 க்கும் மேற்பட்டோருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்ப ட்டது.
இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நலத்திட் ட உதவிகளை வழங்கிய பின் அளித்த பேட்டி:
தி.மு.க., தீய சக்தி; த.வெ.க., நேற்று துவங்கிய கட்சி. த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடக்கவில்லை. அ. தி.மு.க., தான் பெரிய கட்சி, எங்களை நாடி தான் மற்ற கட்சிக ள் வருவர்.
யாரெல்லாம் வந்துள்ளார்கள், தொகுதி எண்ணிக்கை குறித்து மிக விரைவில் அறிவிப்போம். மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது .
பா.ஜ., ஆளும் இடங்களில் எல்லாம் மத மோதல்கள், ஜாதி பிரச்னை ஏதும் இல்லை. அதேபோல், 2017ல் இருந்து, நான்கரை ஆண்டுகள் கூட்டணியில் பா.ஜ., இருந்தது. அப்போது, அ.தி.மு.க., நல்லாட்சி தந்தது.
இந்தியாவை ஆளும் கட்சியாக பா.ஜ., இருந்தாலும், தமிழகத்தின் என்.டி.ஏ., கூட்டணிக்கு தலைமை தாங்குவது அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தான்.
இவ்வாறு, வைகை செல்வன் கூறினார்.

