/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குவைத் - சென்னை விமானத்தில் சிகரெட் புகைத்து பயணி ரகளை
/
குவைத் - சென்னை விமானத்தில் சிகரெட் புகைத்து பயணி ரகளை
குவைத் - சென்னை விமானத்தில் சிகரெட் புகைத்து பயணி ரகளை
குவைத் - சென்னை விமானத்தில் சிகரெட் புகைத்து பயணி ரகளை
ADDED : ஆக 19, 2025 12:50 AM
சென்னை,குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில், சிகரெட் புகைத்து ரகளையில் ஈடுபட்ட பயணி போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
குவைத்தில் இருந்து சென்னைக்கு 'இண்டிகோ' விமானம், நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. இதில், 150 பேர் இருந்தனர்.
இந்த விமானத்தில், தமிழகத்தைச் சேர்ந்த சேக் முகமது, 28, என்பவர் பயணித்தார். இவர், அடிக்கடி விமானத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்று சிகரெட் புகைப்பது தெரிய வந்தது. எச்சரித்த விமான பணிப்பெண்களிடம் தகராறு செய்து, ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார். விமானம் தரை இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள், அவரிடம் சோதனை நடத்தினர்.
பின், விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.