/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலை முதல் இரவு வரை பயணியர் திண்டாட்டம்
/
காலை முதல் இரவு வரை பயணியர் திண்டாட்டம்
ADDED : பிப் 21, 2026 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளால், கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், 44 மின்சார ரயில்கள் ரத்து அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று, காலை முதல் இரவு வரை, போதிய போக்குவரத்து வசதியின்றி குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் பயணியர் அங்கும் இங்கும் அல்லாடினர்.
இதனால், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணியர் கூட்டம் நிரம்பி வழிந்தது.

