/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அபாய சங்கிலியில் பைகளை மாட்டியதால் நடுவழியில் நின்ற பயணியர் விரைவு ரயில்

ADDED : மார் 21, 2025 12:37 AM
கொருக்குப்பேட்டை, பீகாரில் இருந்து, பெரம்பூர், வியாசர்பாடி வழியாக, பெங்களூருவின் மைசூர் செல்லும் பயணியர் விரைவு ரயில், நேற்று காலை 10:46 மணிக்கு, கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென நடுவழியில் ரயில் நின்றதால், பயணியர் குழப்பமடைந்தனர். உடனடியாக, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சோதனையிட்டனர்.
இதில், ரயிலின் கடைசியில் உள்ள முன்பதிவு செய்யப்படாத பெட்டியில், வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், தவறுதலாக பை மாட்டும் கொக்கி என நினைத்து, அபாய சங்கிலியில் பைகளை மாட்டியுள்ளார். அதனால் ரயில் நின்றது தெரியவந்தது.
இருப்பினும், அபாய சங்கலியில் பையை மாட்டியது யார் என்பது குறித்து தெரியவில்லை. எனவே, மேலும் தாமதம் ஏற்படக்கூடாது என்பதால், ரயில் 10 நிமிடம் தாமதமாக, 10:56 மணிக்கு புறப்பட்டு, 11:09 மணிக்கு பெரம்பூர் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.
இதனால், மின்சார ரயில் மற்றும் பயணியர் விரைவு ரயில் போக்குவரத்தில், சிறிது தாமதம் ஏற்பட்டது.