/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திரிசூலத்தில் நிற்காத ரயில் பயணியர் வாக்குவாதம்
/
திரிசூலத்தில் நிற்காத ரயில் பயணியர் வாக்குவாதம்
ADDED : ஜூலை 01, 2025 12:20 AM
சென்னை, புதுச்சேரியில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த ரயில், திரிசூலம் நிலையத்தில் நிற்காமல் சற்று துாரம் தள்ளி நிறுத்தப்பட்டதால், பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இருந்து தினமும் காலை 9:00 மணிக்கு, எழும்பூர் வரும் விரைவு ரயில் செங்கல்பட்டு அடுத்து, தாம்பரம், திரிசூலத்தில் நிற்கும். அதன்பின், எழும்பூரில் தான் நிற்கும்.
வழக்கம்போல், புதுச்சேரியில் இருந்து நேற்று புறப்பட்ட விரைவு ரயில், காலை 8:53 மணிக்கு திரிசூலத்தில் நிற்காமல் சென்றதால், பயணியர் சத்தம் போட்டனர். சுதாரித்த ஓட்டுநர், அந்த ரயில் நிலையத்தில் இருந்து 300 அடி துாரம் தள்ளி நிறுத்தினார்.
இதனால் இறங்க முடியாமல் பலர் சிரமப்பட்டனர். பின், ரயில் நிலைய அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ரயில் ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.