/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் கை துண்டிப்பு
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் கை துண்டிப்பு
ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் கை துண்டிப்பு
ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியின் கை துண்டிப்பு
ADDED : டிச 27, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரக்கோணம், கோயம்புத்துாரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும், 'கோவை எக்ஸ்பிரஸ்' ரயில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது.
ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட, 'டி-10' பெட்டியில் பயணம் செய்த சென்னை, சூளைமேடைச் சேர்ந்த வினோத், 29, என்பவர், ரயில் புறப்பட்டபோது ரயிலில் இருந்து தவறி விழுந்தார்.
தண்டவாளத்தில் சிக்கியவரின் வலது கை துண்டான நிலையில், அருகே இருந்தவர்கள் மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாயிலாக, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.