/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் இலவச 'வைபை' வசதி மீண்டும் கிடைத்ததால் பயணியர் மகிழ்ச்சி
/
ஏர்போர்ட்டில் இலவச 'வைபை' வசதி மீண்டும் கிடைத்ததால் பயணியர் மகிழ்ச்சி
ஏர்போர்ட்டில் இலவச 'வைபை' வசதி மீண்டும் கிடைத்ததால் பயணியர் மகிழ்ச்சி
ஏர்போர்ட்டில் இலவச 'வைபை' வசதி மீண்டும் கிடைத்ததால் பயணியர் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 27, 2025 12:48 AM

சென்னை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், இலவச வைபை சேவை செயல்பாட்டிற்கு வந்துள்ளது, பயணியரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், இலவச வைபை சேவை வசதி உள்ளது. சென்னை விமான நிலையத்தில், இந்த சேவை, டெண்டர் காரணங்களுக்காக ஆறு மாதங்களாக முடங்கியது. இது பயணியருக்கு தலைவலியாக இருந்தது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் வைபை சேவை நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை விமான நிலையத்தில் உள்ள முனையங்களில், வைபை சேவை வழங்க டெண்டர் விடும் பணி நடந்ததால், சில மாதங்களாக சேவை கிடைக்காமல் போனது.
தற்போது, பயணியர் பயன்படுத்தும் வகையில் அதிவேக வைபை சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சர்வதேச பயணியர்பாஸ்போர்ட், போர்டிங்பாஸ் ஆகியவற்றை ஸ்கேன் செய்து ஒ.டி.பி.,பெற்று, இந்த இலவச வைபை சேவையை பயன்படுத்த முடியும்.
'நெட்வோர்க்' குறித்த புகார்கள் ஏதேனும் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பயணிக்கு நெஞ்சுவலி
மும்பையில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு, இண்டிகோ விமானம் புறப்பட்டது. இதில், 162 பயணியர் இருந்தனர்.
விமானம் கோவா மாநிலத்தை கடந்து பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து, விமானி அனுமதி பெற்று, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் விமான நிலையத்தில், அதிகாலை 4:45 மணிக்கு அவசரமாக தரையிறக்கினார்.
தயார் நிலையில் இருந்த விமான நிலைய மருத்துவ குழுவினர், விமானத்தில் இருந்த பயணியை பரிசோதித்து, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின் மற்ற பயணியருடன் புறப்பட்ட விமானம், காலை 6:40 மணிக்கு சென்னை வந்து தரையிறங்கியது.