/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இண்டிகோ'வின் 36 விமான சேவைகள் ஒரே நாளில் ரத்தால் பயணியர் திணறல்
/
'இண்டிகோ'வின் 36 விமான சேவைகள் ஒரே நாளில் ரத்தால் பயணியர் திணறல்
'இண்டிகோ'வின் 36 விமான சேவைகள் ஒரே நாளில் ரத்தால் பயணியர் திணறல்
'இண்டிகோ'வின் 36 விமான சேவைகள் ஒரே நாளில் ரத்தால் பயணியர் திணறல்
ADDED : டிச 12, 2025 05:14 AM
சென்னை: சென்னையில் இருந்து இயக்கப்படும் இண்டிகோ நிறுவனத்தின் 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், நேற்று பயணியர் அவதிப்பட்டனர்.
இண்டிகோ நிறுவனத்தில் போதிய விமானிகள் இல்லாதது, ஊழியர்கள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளால், இம்மாதம் 1ம் தேதியில் இருந்து, விமான சேவை பாதிக்கப்பட்டு, பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
சென்னை விமான நிலையத்திலும் டிச., 1 முதல், இண்டிகோவின் விமான சேவை அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று, 10வது நாளாக, 36 விமானங்கள் எவ்வித காரணமும் இன்றி, ரத்து செய்யப்பட்டன.
குறிப்பாக டில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், பாட்னா, புவனேஸ்வர், கொச்சி, கொல்கட்டா, கோவை உள்ளிட்ட உள்நாட்டு விமானங்கள்; சிங்கப்பூர், பினாங்கு ஆகிய சர்வதேச விமானங்கள் என, 36 வி மானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணியர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
அடுத்து வரும் நாட்களிலும், ரத்தாகும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என, விமான போக்குவரத்து வல்லு நர்கள் தெரிவித்தனர்.