/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லண்டன்விமானத்தில் பழுது 8 மணி நேரம் தவித்த பயணியர்
/
லண்டன்விமானத்தில் பழுது 8 மணி நேரம் தவித்த பயணியர்
லண்டன்விமானத்தில் பழுது 8 மணி நேரம் தவித்த பயணியர்
லண்டன்விமானத்தில் பழுது 8 மணி நேரம் தவித்த பயணியர்
ADDED : டிச 05, 2024 12:19 AM
சென்னை, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து, சென்னை வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், 320 பேருடன் நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டது.
லண்டன் வான்வெளியில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமான கட்டுப்பாட்டு பகுதியில் கோளாறு ஏற்பட்டதற்கான அபாய அலாரம் அடித்துள்ளது.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, விமானி உடனடியாக விமானத்தை லண்டன் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். பயணியர் பத்திரமாக இறக்கி, தங்க வைக்கப்பட்டனர்.
பொறியாளர்கள் குழு விமானத்தை சரி செய்யும் பணியில் இறங்கியது. பழுது நீக்கப்பட்டு, எட்டு மணி நேரம் கழித்து, விமானம் சென்னைக்கு புறப்பட்டது. விமானம் வழக்கமாக காலை, 5:40 மணிக்கு சென்னை வரும். ஆனால், நேற்று தாமதமாக மதியம் 1:00 மணிக்கு வந்தது.
குறித்த நேரத்தில் லண்டனில் இருந்து பயணியர் சென்னை வர முடியாமலும், இங்கிருந்து லண்டன் செல்ல முடியாமலும் பயணியர் சிரமப்பட்டனர்.
௶'பார்க்கிங்' கட்டணம் உயர்வு
சென்னை விமான நிலையத்தில், வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டண உயர்வு நேற்று அமலுக்கு வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில், ஏரோஹப் மேற்கு பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங் உள்ளது. இங்கு, விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், சுங்கத்துறை, சி.ஐ.எஸ்.எப்., குடியுரிமை பிரிவினர் என, பலர் தங்கள் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதற்கான கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம், 80 ரூபாயில் இருந்து 85 ரூபாய்; 5 மணி நேரம் நிறுத்த, 295 ரூபாயிலிருந்து 310 ரூபாய்; நாள் முழுக்க நிறுத்த, 525 ரூபாயில் இருந்து 550 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதேபோல், டெம்போ வேன்கள், பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு அதிகபட்சமாக, 30 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இரு சக்கர வானகங்களுக்கு, அரை மணி நேரத்திற்கு, 20 ரூபாய் கட்டணம். போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முயற்சிக்காமல், வாகன நிறுத்த கட்டணம் உயர்த்தப்பட்டது, பயனாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.