தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஓராண்டில் 30 லட்சம் பேர் பயணம்; விமான நிறுவனங்கள் தமிழகத்தை புறக்கணிக்க என்ன காரணம்?
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஓராண்டில் 30 லட்சம் பேர் பயணம்; விமான நிறுவனங்கள் தமிழகத்தை புறக்கணிக்க என்ன காரணம்?
ADDED : ஆக 11, 2025 08:20 AM

நமது நிருபர்
தமிழக விமான நிலையங்கள் வழியாக கடந்த நிதியாண்டில், 30.78 லட் சம் பயணியர் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர்.
சிங்கப்பூர், மலேஷியா. தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ், புருனே, கம்போடியா, இந்தோ னேஷியா, மியான்மர், லாவோஸ் உள்ளிட்ட 11 நாடுகள். தென்கிழக்கு ஆசிய பகுதிக்குள் அடங் கும்.
இந்தியாவின் முக்கிய சர்வதேச விமான நிலையங்களில் இருந்து, எட்டு தென் கிழக்காசிய நாடுகளுக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன. கம்போடியா, லாவோஸ், பிலிப்பைன்ஸ், நாடுகளுக்கு நேரடி சேவை கிடையாது.
இருப்பினும், தமிழகத்தில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணிப்போர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
வேலை, கல்வி, வணி கம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு தேவை களுக்காக, தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர், மலே ஷியா, தாய்லாந்து, புருனே போன்ற நாடுகளுக்கு, தமிழர்கள் அதிகம் பயணம் செய்கின்றனர்.
கடந்த நிதியாண்டில் மட்டும் சென்னை, திருச்சி கோவை, மதுரை சர்வ தேச விமான நிலையங்கள் வாயிலாக, 30.78 லட்சம் பேர் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர்.
இரு தரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் படி, இந்திய விமான நிறு வனங்கள், இங்கிருந்து சேவைகளை அதிகரிக்க முன்வந்தால், தமிழக பய ணியர் எண்ணிக்கையும் கணிசமாக உயரும் என. விமான போக்குவரத்து துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தியாவின் சர்வதேச விமான போக்குவரத்து, வளைகுடா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளையே அதிகமாக சார்ந்துள்ளது.தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான விமான போக்குவரத்தில், தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில், 20.44 சதவீதம் பயணியர், தமிழக விமான நிலையங்கள் வழியாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளனர்.
இதில், பெரும்பாலான பங்கு என்பது, வெளிநாட்டு விமான நிறுவனங்களையே சார்ந்துள்ளது. அதாவது, மலேஷியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த விமான நிறுவனங்களே, இங்கிருந்து தங்கள் நாடுகளுக்கு அதிக சேவைகள் வழங்குகின்றன. இந்திய விமான நிறுவனங்கள், தமிழகத்திற்கு தேவையான சேவைகளை வழங்குவது கிடையாது.
எடுத்துக்காட்டாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு தமிழக விமான நிலையங்கள் வாயிலாக பயணம் செய்த 30 லட்சம் பயணியரில், 'ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு, ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.
அதன் சென்னை - சிங்கப்பூர் விமான சேவை பெயரளவிலேயே செயல் படுகிறது. சர்வதேச நாடு களுக்கு விமானங்களை இயக்கும்போது, 'பாஸா' எனும் இரு நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
இதில், விமானத்தின் வகை, வாராந்திர பயணியர் இருக்கைகள் எவ்வளவு போன்றவை இடம் பெறும். அதன் அடிப்படையில் தான் விமானங்களும் இயக்கப்படும்.
தென்கிழக்கு ஆசிய விமான நிறுவனங்கள் அதன் பங்கை முழுவதும் பூர்த்தி செய்து விட்டன. சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளுக்கான கூடுதல் விமான தேவை இருக்கிறது.
ஆனால், இந்தியா-சிங்கப்பூர் இரு தரப்பு விமான ஒப்பந்தத்தின் கீழ், வாராந்திர இருக்கைகள் 7,000; மலேஷியாவுக்கான ஒப்பந்தத்தில், 15,000 வாராந்திர இருக்கைகள் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளன. அதாவது, இந்த எண்ணிக்கைக்கு பயணியரை அழைத்து செல்லும்,அளவுக்கு, விமானங்களை நம்மால் இயக்க முடியும்.
அதே நேரத்தில், அந் நாட்டு விமான நிறுவனங்கள் தங்களுக்கான ஒப்பந்தங்களை முழுமையாக பயன்படுத்தி விட்டன. எனவே, தற்போது அந்த நிறுவனங்களால் சேவை களை, தமிழக விமான நிறுவனங்களில் இருந்து அதிகரிக்க முடியாது.
இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனங்களான 'இண்டிகோ, ஏர் இந்தியா' ஆகியவை நினைத்தால், கூடுதல் சேவை வழங்கு வது சாத்தியமே. ஆனால், இந்த நிறுவனங்கள் தமிழகத்தை ஒரு பொருட்டாக கூட கண்டு கொள்ளவில்லை.
பயணியர், 'டிமாண்ட்' இல்லாத, மற்ற மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்து, 'போதும் போதும்' என சொல்லும் அளவுக்கு இண்டிகோவும், ஏர் இந்தியாவும் விமானங்களை இயக்குகின்றன.
'எங்களுக்கு தேவை இருக்கிறது; ஒப்பந்தப்பங்கள் படியாவது விமானங்களை இயக்குங்கள்' என கூப்பாடு போட்டாலும், இந்நிறுவனங்கள் கண்டுகொள்வதில்லை.
ஒருபுறம் மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளாக இரு தரப்பு விமான சேவை ஒப்பந்தத்தில், தமிழக விமான நிலையங்களை சேர்க்காமல் புறக்கணிக்கிறது; மறுபுறம், இந்திய விமான நிறுவனங்கள் ஒப் பந்தத்தில் விமானங்களை இயக்க வாய்ப்பிருந்தும், இயக்காமல் புறக்கணித்து வருகின்றன. இது, ஏதோ ஒரு உள்குத்தாகவே தெரி கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.