sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!

/

அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!

அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!

அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு நிராகரிப்பு ஏன் தெரியுமா? இதுதான் காரணம்!

17


UPDATED : அக் 10, 2025 05:30 PM

ADDED : அக் 10, 2025 04:40 PM

Google News

17

UPDATED : அக் 10, 2025 05:30 PM ADDED : அக் 10, 2025 04:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்கு காரணம் குறித்து பல்வேறு தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த சில தினங்களாக அதிகம் கவனம் பெற்ற விஷயம் அமெரிக்க அதிபர் டிரம்பும், அமைதிக்கான நோபல் பரிசும் தான். தான் 7 போர்களை நிறுத்தியதற்காக, இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தான் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டு வந்தார். மேலும், நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறி வந்தார்.

இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதில் டிரம்பின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் காலத்திற்குப் பிறகே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 1ம் தேதிக்கு முன்பாக, நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிபர் டிரம்ப்பின் பெயரை பிப்.,1க்குப் பிறகு பரிந்துரை செய்துள்ளன. இதுவே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கான காரணமாகும்.

இது குறித்து நார்வேவைச் சேர்ந்த நோபல் பரிசு தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜோர்கன் வாட்னே பிரிட்னெஸ் கூறியதாவது; நோபல் பரிசு தேர்வு கமிட்டி, அனைத்து வகையான பிரசாரங்கள், ஊடக கவனத்தையும் பார்த்துள்ளது. அமைதிக்கு வழிவகுக்கும் காரணிகள் குறித்து ஆயிரக்கணக்கான கடிதங்களை ஆண்டுதோறும் பெறுகிறோம். நாங்கள் அமர்ந்திருக்கும் அறை தைரியம் மற்றும் நேர்மையால் நிரம்பியுள்ளது. எங்களின் முடிவை ஆல்பிரட் நோபலின் (நோபல் பரிசை அறிமுகப்படுத்தியவர்) செயல் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கிறோம், இவ்வாறு கூறினார்.

ஹென்றி ஜாக்சன் சொசைட்டியின் வரலாற்று ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் தியோ ஜெனூ கூறுகையில், 'அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் நீண்ட காலமாக நிலைக்குமா? என்று நிரூபிக்கப்படவில்லை. குறுகிய காலத்தில் சண்டையை நிறுத்துவதற்கும், மோதலின் அடிப்படை காரணங்களை தீர்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது,' இவ்வாறு அவர் கூறினார்.

டிரம்ப் பணி தொடரும்

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் செயுங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கும், போரை நிறுத்துவதற்கும், உயிர்களை காப்பதற்கான பணிகளில் டிரம்ப் தொடர்ந்து ஈடுபடுவார். மனிதநேயத்திற்கான மனம் அவரிடம் உள்ளது. அமைதியை விட அரசியலை முன்னிறுத்துவதையே தேர்வுக்குழுவினர் முன்னிறுத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us