/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிழற்குடையில் விபத்தில் சிக்கிய கார் நிற்க இடமில்லாததால் பயணியர் அவதி

ADDED : மே 18, 2025 03:40 AM

சென்னை:கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு கே.கே.நகர் முனுசாமி சாலையில், அமுதம் பேருந்து நிறுத்தம் உள்ளது.
இங்குள்ள பயணியர் நிழற்குடையில், விபத்திற்குள்ளான 'ஹூண்டாய் சான்ட்ரோ' கார் ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.
நிழற்குடையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள இந்த காரால், பயணியர் இருக்கைகளில் அமர வழியின்றி, நீண்ட நேரம் நிற்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதி பயணியர் கூறியதாவது:
சென்னையில் பயணியர் நிழற்குடைகளை அவ்வப்போது 'மாஸ் கிளீனிங்' என்ற பெயரில் மாநகராட்சி சுத்தம் செய்கிறது. ஆக்கிரமிப்பு, குப்பையை அகற்றுவது உள்ளிட்ட பணியை மேற்கொள்கிறது.
ஆனால், அமுதம் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ள காரை மட்டும் அகற்றாமல் உள்ளது. யாருக்கு சொந்தமான கார் என்பதும் தெரியவில்லை.
போக்குவரத்து போலீசாரும், விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு துறை அதிகாரிகள் அலட்சியத்தால், பயணியருக்கு தான் சிரமம் ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.