/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டி ரயில் நிலையத்தில் தடுப்புகள் இடம் குறுகியதால் பயணியர் அவதி
/
கிண்டி ரயில் நிலையத்தில் தடுப்புகள் இடம் குறுகியதால் பயணியர் அவதி
கிண்டி ரயில் நிலையத்தில் தடுப்புகள் இடம் குறுகியதால் பயணியர் அவதி
கிண்டி ரயில் நிலையத்தில் தடுப்புகள் இடம் குறுகியதால் பயணியர் அவதி
ADDED : அக் 21, 2024 03:19 AM

சென்னை:சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், கிண்டி ரயில் நிலையம் முக்கியம். ஐ.டி., நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இருப்பதால், பயணியர் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். தினமும், 65,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், இந்த ரயில் நிலையம், 13.5 கோடி ரூபாயில், மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, நடைமேடை 1ல், ரயில் பாதைக்கு அருகில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைமேடை இரண்டில், பழைய மேற்கூரைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், பயணியர் நடந்து செல்லும் பகுதிகள் குறுகிவிட்டது.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
கிண்டி ரயில் நிலைய நடைமேடைகளில் பழைய கட்டுமான பொருட்கள், மேற்கூரைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதுபோல், மேம்பாட்டு பணிக்காக தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், ரயிலில் இறங்கும் பயணியர், நெரிசலில் சிக்கி மெதுவாக செல்ல வேண்டியுள்ளது. கொஞ்சம் தவறினாலும், ரயில் தண்டவாளத்தில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. அதனால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'கிண்டி ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை, இன்னும் ஒரு மாதத்தில் முடிக்க உள்ளோம். அதன்பின், நடைமேடை தடுப்புகள், பழைய பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.