/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவனந்தபுரம் - சென்ட்ரல் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்த பயணியர் வலியுறுத்தல்
/
திருவனந்தபுரம் - சென்ட்ரல் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்த பயணியர் வலியுறுத்தல்
திருவனந்தபுரம் - சென்ட்ரல் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்த பயணியர் வலியுறுத்தல்
திருவனந்தபுரம் - சென்ட்ரல் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்த பயணியர் வலியுறுத்தல்
ADDED : ஜன 15, 2026 06:24 AM

சென்னை: 'திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயிலுக்கு, பெரம்பூரில் நிறுத்தம் வழங்க வேண்டும்' என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் ரயில், தினமும் மாலை 5:15 மணிக்கு புறப்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், வழியாக, மறுநாள் காலை 10:00 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வருகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர பூஜையின்போது, இந்த ரயிலை அதிக அளவில் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
திருவனந்தபுரம் - சென்னை சென்ட்ரல் தினசரி ரயில், தினமும் காலை 10:00 மணிக்கு வந்து விடுவதால், இந்த ரயிலில் வெளியூர் பயணியரை தாண்டி, தினசரி அலுவலகம் வந்து செல்வோரும், அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, காட்பாடி மற்றும் அரக்கோணம் ரயில் நிலையங்களில், அதிக அளவில் பயணியர் ஏறி, சென்னை வருகின்றனர். இந்த ரயில், வியாசர்பாடி ஜீவா மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும்போது, சிக்னலுக்காக 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்கிறது.
இந்த நேரத்தில், பயணியர் ரயில் பாதையில் இறங்கி, ஆபத்தான முறையில் நடந்து செல்கின்றனர். எனவே, இந்த ரயிலுக்கு, பெரம்பூரில் நிறுத்தம் அளித்தால், நுாற்றுக்கணக்கானோர் பெரம்பூரில் இறங்குவர். பயணியரின் இந்த கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

