/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு மண்டல கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்
/
அடையாறு மண்டல கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அடையாறு மண்டல கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அடையாறு மண்டல கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்
ADDED : மார் 14, 2024 12:30 AM
அடையாறு, அடையாறு மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், நேற்று நடந்தது. இதில், சீனிவாசன், ராஜசேகர், புருசோத்தமன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வார்டுகளில் நடக்கும் சாலை, வடிகால் பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். சில பகுதிகளில், கழிவுநீர் பிரச்னை உள்ளது. தேர்தலின்போது, மக்களிடம் இருந்து கோரிக்கைகள் அதிகமாக இருக்கும்.
அதை தீர்க்கும் வகையில், அதிகாரிகள் செயல்பட வேண்டும் என, கவுன்சிலர்கள் பேசினர்.
மேலும், ''177வது வார்டில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை,'' என, தி.மு.க., கவுன்சிலர் மணிமாறன் கூறினார்.
இதற்கு, சேதமடைந்த சாலைகள், தரமாக சீரமைக்கப்பட்டு உள்ளன.
எந்த தெரு என குறிப்பிட்டு கூறினால், நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்' என, அதிகாரிகள் கேட்டனர்.
மணிமாறன், மக்கள் என்னிடம் கூறியதால், இந்த கூட்டத்தில் பேசினேன்.
எந்த தெரு என, மீண்டும் அவர்களிடம் கேட்டு கூறுகிறேன்,'' என, அவர் கூறினார்.
இதையடுத்து மண்டலக்குழு தலைவர் துரைராஜ், ''பொத்தாம் பொதுவாக, சாலைகள் தரமில்லை என கவுன்சிலர் கூறுவதை ஏற்க முடியவில்லை.
எந்த பிரச்னை என்றாலும், உடனுக்குடன் அதிகாரிகள் சரி செய்து வருகின்றனர். மக்கள் கூறினாலும், களத்தை ஆய்வு செய்து கூட்டத்தில் பேசுவது நல்லது,'' என்றார்.
தொடர்ந்து, சாலை சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கான 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

