/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் பாதிப்பு
/
சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் பாதிப்பு
சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் பாதிப்பு
சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் பாதிப்பு
ADDED : டிச 08, 2025 05:00 AM
தாம்பரம்: மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் மற்றும் மருந்தாளுனர் இல்லாததால், கர்ப்பிணியர், நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி, 50வது வார்டு, ரங்கநாதபுரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. ரங்கநாதபுரம், கடப்பேரி, கஸ்துாரிபாய் நகர், மேற்கு தாம்பரம், புலிகொரடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினசரி, 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு சிகிச்சைக்களுக்காக வந்து செல்கின்றனர்.
இங்கு, பொது, மகப்பேறு, குழந்தை நலன், கண், பல், தோல், முடநீக்கு இயல், மன நலம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கர்ப்பிணியருக்கான சிகிச்சை உண்டு. இந்த மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒரு மருத்துவர் கூட இல்லை. அதேபோல், மருந்தாளுனர், ஒப்புகை சீட்டு வழங்குபவரும் இல்லை.
செவிலியர்களே, ஒப்புகை சீட்டு வழங்கி, மருத்துவம் பார்க்கும் சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து, பல முறை கோரிக்கை விடுத்தும், மருத்துவரை நியமிக்க, மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு போதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

