/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இருபுறமும் நடைபாதை உடைப்பு பாதசாரிகள், பஸ் ஓட்டுனர்கள் அவதி
/
இருபுறமும் நடைபாதை உடைப்பு பாதசாரிகள், பஸ் ஓட்டுனர்கள் அவதி
இருபுறமும் நடைபாதை உடைப்பு பாதசாரிகள், பஸ் ஓட்டுனர்கள் அவதி
இருபுறமும் நடைபாதை உடைப்பு பாதசாரிகள், பஸ் ஓட்டுனர்கள் அவதி
ADDED : ஏப் 03, 2025 12:38 AM

சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை - லாயிட்ஸ் சாலையை இணைக்கும் கான்ரான் ஸ்மித் சாலை, 700 மீட்டர் நீளமானது.
இங்கு அரசு, தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை, காவலர் குடியிருப்பு, உணவு வாணிப கழகம் என, ஏராளமானவை உள்ளன.
இச்சாலையின் நடைபாதையை புதிதாக அமைப்பதற்காக, இருபுறமும் உடைக்கப்பட்டுள்ளதால், பாதசாரிகள் வேறு வழியின்றி சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:
கான்ரான் ஸ்மித் சாலையில் வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு வரும் வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதால், பாதசாரிகள் நடக்க சிரமம் ஏற்படுகிறது.
நடைபாதையை உடைத்து, கான்கிரீட் கலவை சாலையோரம் இருப்பதால், இவ்வழியே பேருந்துகள் இயக்குவது ஓட்டுநர்களுக்கு சவாலாக இருக்கிறது.
ஒரே நேரத்தில், இருபுறங்களிலும் நடைபாதையை உடைத்திருக்கக்கூடாது. ஒருபுறம் முடிந்ததும், மறுபுறம் பணியை செய்திருக்க வேண்டும். திட்டமிடாமல் அதிகாரிகள் செய்ததால், சிரமம் ஏற்படுகிறது.
உடைக்கப்பட்ட நடைபாதை கழிவை அப்புறப்படுத்தி, புதிய நடைபாதையை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

