/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் ஒருங்கிணைந்த சிகிச்சை மையம்
/
குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் ஒருங்கிணைந்த சிகிச்சை மையம்
குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் ஒருங்கிணைந்த சிகிச்சை மையம்
குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் ஒருங்கிணைந்த சிகிச்சை மையம்
ADDED : ஜூலை 16, 2025 12:17 AM
சென்னை, எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், 'டைப் 1' நீரிழிவு நோய்க்கு, சிறப்பு பராமரிப்பு வழங்குவதற்கான புதிய மையத்தை, தமிழ்நாடு தேசிய சுகாதார மையமும், கோவையைச் சேர்ந்த 'இதயங்கள்' அறக்கட்டளையும் இணைந்து துவங்கி உள்ளன.
இந்த மையத்தை, தமிழ்நாடு தேசிய சுகாதார மைய இயக்குநர் அருண் தம்புராஜ், மருத்துவ கல்வி இயக்குநர் தேரணிராஜன்,சென்னை மருத்துவ கல்லுாரி முதல்வர் சாந்தாராமன், மருத்துவமனை இயக்குநர் லட்சுமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
நீரிழிவு நோய் மைய தலைமை டாக்டர் ஸ்ரீதேவி கூறியதாவது:
டைப் - 1 நீரிழிவு நோய்க்கு, சிறப்பு பராமரிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு, இம்மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.
உடலில், கணையம் என்ற உறுப்பில் இன்சுலின் சுரக்கும் திசுக்கள் சேதமடைவதால், டைப் - 1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இவர்களுக்கு வாழ்நாள் முழுதும், இன்சுலின் ஊசி செலுத்துவது அவசியமாக உள்ளது. ஏற்கனவே இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், அவை பொதுவான சிகிச்சைகளாகவே இருந்தது.
தற்போது, டைப் - 1 நீரிழிவு நோய் உள்ள குழந்தைகளுக்கு, ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, இன்சுலின், குளுக்கோமீட்டர் கருவி, பரிசோதனை தாள், பேனா ஊசிகள், உடல் நலம் பெற அறிவுரைகள், பின்விளைவுகள் கண்டறியும் பரிசோதனை ஆகியவை புதிதாக துவங்கப்பட்ட மையத்தில் வழங்கப்படும்.
மேலும், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யும் கருவி, கண் பரிசோதனை கருவி உள்ளிட்ட வசதிகளுடன் முதன் முறையாக அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.