/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம்
/
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம்
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம்
மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம்
ADDED : செப் 27, 2024 12:54 AM
சென்னை,
சென்னை மாநகராட்சி, அம்பத்துார் மண்டலத்தில் வெங்கடேஸ்வரா நகர், புதுார் பானு நகர், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர் கால்வாய்களில் கழிவுநீர் விடப்படுகிறது. இந்த கழிவுநீர், கால்வாய் வாயிலாக புழல் ஏரியில் கலக்கிறது. இதனால் ஏரி மாசடைகிறது என, நாளிதழ்களில் செய்தி வெளியானது.
இதன் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, சென்னை மாநகராட்சி அம்பத்துார் மண்டல அலுவலர், தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த அறிக்கை:
ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சி சார்பில், மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. புழல் ஏரியின் பின் பகுதியில், சிறிய நுழைவுவாயில்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
வெங்கடேஸ்வரா நகர், புதுார் பானு நகர், கள்ளிக்குப்பத்தில் கான்கிரீட் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளன.இப்பகுதியில் பாதாளச் சாக்கடை இணைப்பு பெறாத குடியிருப்புவாசிகள், மழைநீர் வடிகாலில் வீட்டு கழிவுநீரை விடுகின்றனர்.
இதை தடுக்க வீட்டு உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு, 2.99 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி 79, 80, 82 ஆகிய வார்டுகளில் 1,383 வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
இப்பகுதியில், மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்கின்றனர். மழைநீர் கால்வாயில், கழிவுநீர் விடப்படுவது கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.