/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பினாங்கு மாநாடு சென்னையில் ரோட் ஷோ
/
பினாங்கு மாநாடு சென்னையில் ரோட் ஷோ
ADDED : ஜன 21, 2025 12:42 AM
சென்னை, பினாங்கு மாநாடு மற்றும் கண்காட்சி பணியகம் சார்பில். ஜன., 13 முதல் 20ம் தேதி வரை, பினாங்கு எட்டாவது, 'ரோட் ஷோ' சென்னையில் நடத்தப்பட்டது.
இதுகுறித்து, பணியக தலைமை நிர்வாக அதிகாரி அஷ்வின் குணசேகரன் கூறியதாவது:
இந்திய வர்த்தக சந்தையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்காக, 2017ம் ஆண்டு முதல், பினாங்கு மாநாடு சார்பில், ரோட்ஷோ நடத்தப்பட்டு வருகிறது. ரோட்ஷோவில், 200 மேற்பட்ட சுற்றுலா நிறுவனங்களையும், 30க்கும் மேற்பட்ட ஊடக பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளோம்.
இந்த ஆண்டு சிறப்பு நிகழ்வாக பினாங்குக்கும், சென்னைக்கும் இடையேயான, இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை இணைக்கப்படுகிறது. இது, பினாங்கு, தமிழக சுற்றுலா சந்தையில் திருப்பு முனையாக அமையும்.
இந்தியாவின், 32 உள்நாட்டு நகரங்களில் இருந்து வரும் பயணியருக்கு, பினாங்கிற்கு தடையற்ற சேவை வழங்கப்படுகிறது.
இந்தியர்களுக்கான விசா விலக்கை, 2026 டிச., 31 வரை, மலேஷியா அரசு அதிகாரப்பூர்வமாக நீட்டித்துள்ளது. இதன் வாயிலாக, இந்திய சுற்றுலா பயணியர், 30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேஷியா வந்து செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

