/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைக்காலத்தில் கால்வாய் பணி அமைந்தகரையில் மக்கள் அதிருப்தி
/
மழைக்காலத்தில் கால்வாய் பணி அமைந்தகரையில் மக்கள் அதிருப்தி
மழைக்காலத்தில் கால்வாய் பணி அமைந்தகரையில் மக்கள் அதிருப்தி
மழைக்காலத்தில் கால்வாய் பணி அமைந்தகரையில் மக்கள் அதிருப்தி
ADDED : டிச 04, 2025 02:05 AM

அமைந்தகரை: முறையாக திட்டமிடாமல் மழைக்காலத்தில் துவங்கிய வடிகால் பணிகளால், குடியிருப்பு மக்கள் அதிருப்தி யில் உள்ளனர்.
அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டில் அமைந்தகரை, திருவீதி அம்மன் கோவில் தெருக்கள் மற்றும் மஞ்சக்கொல்லை தெரு உள்ளள. இந்த பகுதியில் நுாற்றக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு, 10 ஆண்டுகளுக்கு பின், பலகட்ட போராட்டங்களை அடுத்து, 16.72 லட்சம் ரூபாய் புதிய சாலை அமை க்க திட்டமிட்டப்பட்டது. பழைய வடிகால்வாயை புதுப்பித்த பின், சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு பல முறை மனு அளித்தனர்.
இந்நிலையில், மழைக்காலம் என தெரிந்தும், முறையான திட்டமிடல் இல்லாமல், வடிகால்வாய் பணிகளை மூன்று நாட்களுக்கு முன் துவக்கினர். இந்நிலையில், 'டிட்வா' புயல் மழை துவங்கிய உடனே, தடுப்பு அமைத்து பணி நிறுத்தப்பட்டது. மாநகராட்சியின் இந்த செயல், தற்போது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்தோர் கூறியதாவது:
திருவீதி அம்மன் கோவில் தெருக்களில், செங்கற்களால் ஆன பழைய மழைநீர் வடிகால்வாயில் போதிய நீரோட்டம் இல்லை. இதனால் ஆண்டுதோறும், பருவமழை காலங்களில், சாலை மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்குகிறது.
இங்கு புதிய வடிகால் அமைக்காமல், மழைக்காலத்தில் துவங்கியபோதே அதிருப்தி தெரிவித்தோம். எனினும், வடிகால்வாய் பணிகளை துவங்கினர். தற்போது, மழையை காரணம் காட்டி கிடப்பில் போட்டுள்ளனர். இனி எப்போது துவங்குவரோ தெரியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

