/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சைபர்' வழக்குகளில் ரூ.2.04 கோடி மீட்பு
/
'சைபர்' வழக்குகளில் ரூ.2.04 கோடி மீட்பு
ADDED : டிச 04, 2025 02:06 AM
சென்னை: நவம்பர் மாதத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட, 2.04 கோடி ரூபாய் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைமில் அளிக்கப்பட்ட, 36 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, 1 கோடி ரூபாய் மீட்கப்பட்டன.
அதேபோல் வடக்கு மண்டலத்தில், 19.38 லட்சம் ரூபாயும், தெற்கு மண்டலத்தில், 41.53 லட்சம் ரூபாயும், கிழக்கு மண்டலத்தில், 16.16 லட்சம் ரூபாயும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தாண்டில், இதுவரை, 24.92 கோடி ரூபாய் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் சைபர் கிரைம் போலீசார், 146 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, 2.04 கோடி ரூபாயை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

