/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மளிகை கடையில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருள் நாசம்
/
மளிகை கடையில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருள் நாசம்
மளிகை கடையில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருள் நாசம்
மளிகை கடையில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருள் நாசம்
ADDED : டிச 04, 2025 02:07 AM
திருவொற்றியூர்: மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
திருவொற்றியூர், ஜோதி நகர் எட்டாவது தெருவைச் சேர்ந்தவர் ஆதியப்பன், 47; மளிகைக்கடைக்காரர். இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல வியாபாரம் முடித்து கடையை மூடி சென்றார்.
அதிகாலை 2:00 மணிக்கு, கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதாக, பக்கத்து வீட்டில் வசிக்கும் கிஷோர் என்பவர், ஆதியப்பனுக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்து கதவை திறந்து பார்த்தபோது, தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.
தகவலறிந்து வந்த எண்ணுார் தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இருப்பினும், கல்லாவில் இருந்த 10,000 ரூபாய், 'பிரிஜ்'ல் இருந்த மளிகைப் பொருட்கள் என, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. இது குறித்து, சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர். விசாரணையில், மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

