/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காசிமேடில் மீன் வரத்து அதிகரிப்பு உற்சாகமாக வாங்கி சென்ற மக்கள்
/
காசிமேடில் மீன் வரத்து அதிகரிப்பு உற்சாகமாக வாங்கி சென்ற மக்கள்
காசிமேடில் மீன் வரத்து அதிகரிப்பு உற்சாகமாக வாங்கி சென்ற மக்கள்
காசிமேடில் மீன் வரத்து அதிகரிப்பு உற்சாகமாக வாங்கி சென்ற மக்கள்
UPDATED : ஜூலை 07, 2025 12:22 PM
ADDED : ஜூலை 07, 2025 04:30 AM

காசிமேடு:காசிமேடில், மீன் வரத்து அதிகரிப்பு மற்றும் விலை சற்று குறைவால், மீன் பிரியர்கள் உற்சாகமாக வாங்கி சென்றனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மூன்றாவது வாரமான நேற்று, 80க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்கரை திரும்பின. தேங்காய் பாறை, மஞ்சள் பாறை, கடல் விரால் உள்ளிட்ட மீன் வகைகள், அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
மக்கள் கூட்டம் அதிகம் இருந்தும் மீன் வகைகள் அதிகம் இருந்ததால், விலை சற்று குறைவாகவும் கணிசமான விலையிலும் விற்பனை செய்யப்பட்டன.
வழக்கத்திற்கு மாறாக, நேற்று அதிகாலை 1:00 மணி முதல் முற்பகல் 11:00 மணி வரை, காசிமேடில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆர்வமுடன் பேரம் பேசி மீன் வாங்கி சென்றனர்.
வியாபாரிகளும், நல்ல விலை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.
![]() |
150 கிலோ பால் சுறா
காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பைந்தமிழன். இவரது விசைப்படகில், கடந்த வாரம் கோவளம் பகுதியில் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க கொண்டிருந்தனர். அப்போது 150 கிலோ பால் சுறா மீன் வலையில் சிக்கியது.
இதையடுத்து, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த மீன், கிலோ 300 ரூபாய் என, 45,000ரூபாய்க்கு விற்பனையாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.