/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மந்தைவெளிப்பாக்கம் தெரு பெயரை மாற்ற மக்கள் எதிர்ப்பு
/
மந்தைவெளிப்பாக்கம் தெரு பெயரை மாற்ற மக்கள் எதிர்ப்பு
மந்தைவெளிப்பாக்கம் தெரு பெயரை மாற்ற மக்கள் எதிர்ப்பு
மந்தைவெளிப்பாக்கம் தெரு பெயரை மாற்ற மக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 06, 2025 12:40 AM
சென்னை : மந்தைவெளிப்பாக்கம் ஐந்தாவது டிரஸ்ட் கிராஸ் தெருவின் பெயரை, எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு என மாற்ற, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர்.
நாடக கலைஞர் எஸ்.வி.வெங்கட்ராமன் நுாற்றாண்டு விழா, சென்னையில், கடந்த மாதம் 20ம் தேதி நடந்தது.
இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'எஸ்.வி.வெங்கட்ராமன் நாடக உலகில் கொடிகட்டி பறந்தவர்.
'ரத்த தானம் செய்வதில், மாபெரும் சாதனை படைத்துள்ளார். எனவே அவர் வாழ்ந்த தெருவிற்கு, 'எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு' என பெயர் சூட்டப்படும்' என அறிவித்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மந்தைவெளிப்பாக்கம், ஐந்தாவது டிரஸ்ட் கிராஸ் தெருவில் வசிப் போர், முதல்வர் ஸ்டாலினி டம் அளித்துள்ள மனு:
நாங்கள் வசிக்கும் தெரு, பல ஆண்டுகளாக மந்தைவெளிப்பாக்கம், ஐந்தாவது டிரஸ்ட் கிராஸ் தெரு என்ற பெயரில் பிரபலமாக உள்ளது. முதல் டிரஸ்ட் கிராஸ் தெரு முதல் 14வது டிரஸ்ட் கிராஸ் தெரு வரை உள்ளன. இதில் ஒரு தெருவுக்கு மட்டும் வேறு பெயர் வைத்தால், தொடர்ச்சி இல்லாமல் எளிதில் அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும்.
எஸ்.வி.வெங்கட்ராமன் தெரு மாற்றம் குறித்து, அங்கு வசிப்போரிடம் ஆலோசனை கேட்கப்படவில்லை. இது துரதிருஷ்டவசமானது.
பெயர் மாற்றத்தால் அனைத்து ஆவணங்களிலும் பெயர் மாற்ற வேண்டியிருக்கும். இது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கும். எனவே, பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.