/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராம்கி நிறுவனத்தை கண்டித்து திரு.வி.க., நகரில் மக்கள் மறியல்
/
ராம்கி நிறுவனத்தை கண்டித்து திரு.வி.க., நகரில் மக்கள் மறியல்
ராம்கி நிறுவனத்தை கண்டித்து திரு.வி.க., நகரில் மக்கள் மறியல்
ராம்கி நிறுவனத்தை கண்டித்து திரு.வி.க., நகரில் மக்கள் மறியல்
ADDED : நவ 25, 2025 04:59 AM
புளியந்தோப்பு: குப்பை சேகரிக்கும் ராம்கி நிறுவனம், திரு.வி.க.,நகர் மண்டலத்தில் காலி இடத்தில் குப்பை கொட்டுவதை கண்டித்து, அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திரு.வி.க., நகர் தொகுதிக்குட்பட்ட ஆறாவது மண்டலம் 72வது வார்டுக்குட்பட்ட பவுடர் மில்ஸ் சாலையில் உள்ள மின் வாரியத்திற்கு சொந்தமான 2,760 சதுர மீட்டர் காலி இடம் உள்ளது. இங்கு மண்டலம் 5 மற்றும் 6 பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை சேகரிக்கும் ராம்கி நிறுவனம், குறிப்பிட்ட பவுடர் மில்ஸ் சாலையில் உள்ள இடத்தில் கொட்டி வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை அப்பகுதி மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புளியந்தோப்பு போலீசார், பொது மக்களுடன் பேச்சு நடத்தினர்.
இதையடுத்து, 'ராம்கி' நிறுவனம் சார்பில் பேச வந்த மேலாளர் சதீஷ், 'குப்பையை பவுடர் மில்ஸ் சாலையில் உள்ள இடத்தில் கொட்ட மாட்டோம் என்றும், மண்டலம் 5 மற்றும் 6 பகுதியில் சேகரிக்கும் குப்பையை பழைய இடத்திலேயே கொட்டுவோம்' என உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

