/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஷாக்! ஒரே நாளில் ரூ.100 உயர்ந்த முருங்கைக்காய்
/
ஷாக்! ஒரே நாளில் ரூ.100 உயர்ந்த முருங்கைக்காய்
ADDED : நவ 25, 2025 05:00 AM
கோயம்பேடு: முருங்கைக்காய் ஒரு கிலோ நேற்று முன்தினம் 300 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், நேற்று ஒரே நாளில் 100 ரூபாய் அதிகரித்து, 400 ரூபாய்க்கு விற்பனையானது.
கோயம்பேடு சந்தைக்கு பெரம்பலுார், ஒட்டன்சத்திரம், தேனி, நெல்லை, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, முருங்கைக்காய் வரத்து உள்ளது.
ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை, முருங்கைக்காய் சீசன் உள்ளது. தற்போது சீசன் முடிந்ததால், முருங்கைக்காய் வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.
மொத்த விற்பனையில், நேற்று முன்தினம் ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு முருங்கைக்காய் 45 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 100 ரூபாய் அதிகரித்து, கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையானது.
இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சில்லரை விற்பனை கடைகளில் முருங்கைக்காய் விலையை கேட்டு, அவற்றை வாங்காமல் அதிர்ச்சியுடன் மக்கள் செல்கின்றனர். ஹோட்டல்கள், கேன்டீன்கள், விசேஷ நிகழ்ச்சிகளில் சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பதற்கு முருங்கைக்காய் பயன்படுத்துவதும் தவிர்க்கப்பட்டு வருகிறது.

