/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையோரம் வீசப்பட்ட பெயர் பலகை முகவரி தெரியாமல் மக்கள் அலைச்சல்
/
சாலையோரம் வீசப்பட்ட பெயர் பலகை முகவரி தெரியாமல் மக்கள் அலைச்சல்
சாலையோரம் வீசப்பட்ட பெயர் பலகை முகவரி தெரியாமல் மக்கள் அலைச்சல்
சாலையோரம் வீசப்பட்ட பெயர் பலகை முகவரி தெரியாமல் மக்கள் அலைச்சல்
ADDED : பிப் 03, 2024 12:38 AM

கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கத்தில், அகற்றப்பட்டு சாலையோரம் வீசப்பட்ட தெரு பெயர் பலகையை, மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்களின் பெயர், முகவரி, வார்டு எண், மண்டலம் உள்ளிட்ட விபரங்களை, பொதுமக்கள் அறிவதற்கு வசதியாக, பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
முகவரி தேடுவோருக்கு, இந்த தெரு பலகைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் மாநகராட்சி பெயர் பலகைகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
இவற்றை சீரமைக்க மாநகராட்சி முடிவு செய்து, அஞ்சல் குறியீட்டுடன் புதிதாக பெயர் பலகைகள் அமைக்கப்பட்டன.
இதில், குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மாற்றப்பட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் அரைகுறையாக விடப்பட்டுள்ளன.
அந்த வகையில் கீழ்ப்பாக்கம் சாலையிலுள்ள அப்பா கார்டன் தெருவில், பள்ளம் தோண்டும் பணிக்காக தெரு பெயர் பலகை அகற்றப்பட்டது.
அதன் பின் அதை சீரமைக்காமல், சாலையோரத்தில் வீசினர்.
இதனால், அவ்வழியாகச் செல்லும் வெளியூர் வாசிகள் முகவரி தெரியாமல் சிரமப்படுகின்றனர்.
பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தெரு பெயர் பலகைகள் துாக்கி வீசப்பட்டிருப்பது, அதிகாரிகளின் அலட்சியப் போக்கை காட்டுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, பெயர் பலகையை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

