sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'பக்கா' வீடு தருவதாக குடிசைகளை அகற்றிய அரசு 'பெப்பே!' நடுத்தெருவில் வாழ்க்கை நடத்தும் 55 குடும்பங்கள்

/

'பக்கா' வீடு தருவதாக குடிசைகளை அகற்றிய அரசு 'பெப்பே!' நடுத்தெருவில் வாழ்க்கை நடத்தும் 55 குடும்பங்கள்

'பக்கா' வீடு தருவதாக குடிசைகளை அகற்றிய அரசு 'பெப்பே!' நடுத்தெருவில் வாழ்க்கை நடத்தும் 55 குடும்பங்கள்

'பக்கா' வீடு தருவதாக குடிசைகளை அகற்றிய அரசு 'பெப்பே!' நடுத்தெருவில் வாழ்க்கை நடத்தும் 55 குடும்பங்கள்

4


UPDATED : பிப் 06, 2026 08:53 AM

ADDED : பிப் 06, 2026 05:06 AM

Google News

UPDATED : பிப் 06, 2026 08:53 AM ADDED : பிப் 06, 2026 05:06 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிராட்வே: அடுக்குமாடி குடியிருப்பில், 'பக்கா'வான வீடுகள் வழங்குவதாக, பிராட்வே பகுதிகளில், சாலையோரம் வசித்தவர்களின் அனைத்து குடிசைகளையும் அகற்றிய தமிழக அரசு, 55 குடும்பங்களுக்கு வீடுகளை ஒதுக்காமல், 'பெப்பே' காட்டிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் நிர்க்கதியாகி நடுத்தெருவிலேயே சமைத்து சாப்பிட்டு, கொசுக்கடியில் படுத்து உறங்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் என்ற சி.எம்.டி.ஏ., சார்பில், வடசென்னையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.

அந்த வகையில், ஏழுகிணறு, பழைய சிறைச்சாலை சாலையில், 147 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன், முதல்வர் நகர்ப்புற குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.



இரண்டு பிளாக்குகளில், தரைத்தளம் உட்பட ஒன்பது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. தலா 415 சதுர அடியில் மொத்தம், 776 வீடுகள், நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

சமையல் அறை, ஹால், படுக்கையறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த ஜன., 21ல் இக்குடியிருப்புகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, சில பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.

கொசுக்கடி


வீடு ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், தங்கள் குடும்பத்தினருடன் குடியேறி வருகின்றனர். ஆனால், வீடு தருவதாகக்கூறி சாலையோரத்தில் அகற்றிய, 55 வீடுகளுக்கு மட்டும் இதுவரை ஒதுக்கீட்டு ஆணை வழங்காததால் அவர்கள், சாலையோரத்திலேயே வசித்து, சமைத்து சாப்பிடும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சாலையிலும், கட்டட படிக்கட்டுகளிலும் படுத்து, கொசுக்கடியில் துாங்கும் நிலை உள்ளது.

பிராட்வே, டேவிட்சன் தெரு உட்பட 16 தெருக்களில், சாலையோரத்தில் வசித்த 65 குடும்பங்களை ஒரு மாதத்திற்கு முன் சந்தித்த ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 'உங்களுக்கு புதிய வீடு கிடைக்கும்' என்றார்.

இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், அக்குடிசை வீடுகளை மூன்று வாரத்திற்கு முன் அகற்றினர்.

இதையடுத்து, அகற்றப்பட்ட 65 வீடுகளில், 10 பயனாளிகளுக்கு மட்டும், ஏழுகிணறு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 55 பயனாளிக்கு வீடு வழங்கவில்லை.

சாலை மறியல்



இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர் கேட்டபோது, 'உங்களுக்கெல்லாம் வீடு கிடையாது' என, அதிகாரிகள் கூறி, அலட்சியமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அக்குடும்பத்தினர், தங்களுக்கு வீடு வழங்காததை கண்டித்து, பிரகாசம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த பூக்கடை போலீசார், மாநகராட்சி உதவி பொறியாளர் ஆகியோர் சமரச பேச்சு நடத்தினர். அப்போது, 'மனுவில் அளிக்கப்படும் விபரங்களை வைத்து, வீடுகள் ஒதுக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்' என கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

ஒதுக்கீட்டில் சிக்கல் இதுகுறித்து, ராயபுரம் மண்டல அதிகாரிகள் கூறியதாவது:

பிராட்வே பகுதியில், ஒரு குடிசையில், பல குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களது ரேஷன் அட்டையில் ஒரே முகவரி இருப்பதால், வீடு ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் உள்ளது.

மேலும், வீடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் பலர், தற்காலிகமாக குடிசைகளை அமைத்து, அங்கு வசிப்பதாகக் காட்டுகின்றனர். இதனால் உண்மையான பயனாளிகளை, அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.

நீதிமன்ற உத்தரவுகள், போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து, முதற்கட்டமாக, 692 பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு அடுத்த கட்டத்தில் வழங்கப்படும்.

வீடு கிடைக்கவில்லை என, மனுதாரர்கள் அளிக்கும் மனுக்களை அரசிடம் தெரிவித்து, அடுத்தக்கட்டமாக வீடு பெற்று தரப்படும். குடிசை அகற்றப்பட்ட இடங்களில் பாதசாரிகள் வசதிக்காக, நடைபாதை அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆறு தலைமுறையாக இங்க தான் வாழ்க்கை பிராட்வே, டேவிட்சன் தெருவில், ஆறு தலைமுறையாக வசித்து வருகிறேன். வீடு தருவதாக எங்களை அகற்றி, 10 பேருக்கு மட்டும் வீடுகளை தந்துள்ளனர். எங்கள் வீடுகள் இடிக்கப்பட்டதால், சாலையிலும், மின் பெட்டிகள் அருகேயும் படுத்து துாங்கும் நிலை உள்ளது. வீடு தருவதாக கூறி, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஏமாற்றிவிட்டனர்.
- ஜீவிதா, 33, பாதிக்கப்பட்டவர், பிராட்வே.



அமைச்சரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை குடும்பத்தினருடன் ஒன்பது ஆண்டுகளாக வீடில்லாமல், சாலையோரத்தில் குடிசை வீட்டில் வசித்து வருகிறேன். வீடு தருவதாக கூறி, மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை காலி செய்தனர். அதன்பின் கண்டுகொள்ளவில்லை. 'உங்களுக்குதான் வீடு கொடுத்தாச்சே' என, அலட்சியமாக பேசி திருப்பி அனுப்புகின்றனர். அமைச்சர் சேகர்பாபுவிடம் முறையிட்டும் பலனில்லை.
- கவிதா, 30, பாதிக்கப்பட்டவர், பிராட்வே.



படிப்படியாக வீடுகள் ஒதுக்கீடு பிராட்வே பேருந்து நிலையம், ஆதிபன் நாயக்கன் தெரு, தொட்டித்தெரு, செயின்ட் சேவியர் தெரு போன்ற பகுதிகளில் வசித்தோருக்கு, நீதிமன்றம் உத்தரவுப்படி, 307 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், துறைமுகப் பகுதியில் சாலையோரத்தில், 5,000 குடும்பங்கள் உள்ளன. இதில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும், தற்போது வீடுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 400 வீடுகளை, 4,000க்கும் மேற்பட்டோருக்கு, ஒரே நேரத்தில் வழங்க முடியாது. இதுவரை ஒதுக்கிய 700 வீடுகளில், தி.மு.க.,வினருக்கோ, பணம் வாங்கிக்கொண்டோ யாருக்கும் வீடு வழங்கவில்லை. மேலும், டேவிட்சன் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை யாரும் அகற்றவில்லை. மாற்று இடம் ஏற்பாடு செய்யாமல், எந்த பயனாளியையும் அகற்றுவதில்லை. துறைமுகம் பகுதி குடும்பங்களுக்கு, படிப்படியாக வீடுகள் வழங்கப்படும்.
- சேகர்பாபு, அறநிலையத்துறை அமைச்சர்.



முதல்வர் உத்தரவு அதிகாரிகள் பாரபட்சம்

கடந்த ஜன., 26ம் தேதி, குடியரசு தினத்தன்று, பிராட்வே, பிரகாசம் சாலை, மூக்கர் நல்ல முத்து தெருவில், முதல்வர் ஸ்டாலின் நடந்து சென்றார். அங்கு, சாலையோரத்தில் வசித்த 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை பார்த்து, முதல்வர் பேசிவிட்டு சென்றார். சில நாட்கள் கழித்து, அக்குடும்பத்தினருக்கு புதிதாக வீடு தருவதாக கூறிய அதிகாரிகள், சொற்ப குடும்பத்திற்கு மட்டுமே வீடுகளை ஒதுக்கி, மற்றவர்களை நிர்கதியாக்கி உள்ளனர்.








      Dinamalar
      Follow us