/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.ஐந்து லட்சம் மோசடி பெரம்பூர் நபர் கைது
/
ரூ.ஐந்து லட்சம் மோசடி பெரம்பூர் நபர் கைது
ADDED : ஜூலை 26, 2025 12:20 AM

சென்னை :நெதர்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, 4.80 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர், 35. இவருக்கு, வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் நிறுவனம் நடத்தி வந்த, பெரம்பூரைச் சேர்ந்த லாரன்ஸ் ஜோஸ்வா ஜெபகுமார், 35, என்பவர், அறிமுகமாகி உள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு லாரன்ஸ் ஜோஸ்வா ஜெபகுமார், நெதர்லாந்தில் பிசியோதெரபிஸ்ட் வேலை வாங்கி தருவதாக கூறி, சவுந்தரிடம் ஐந்து லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
சவுந்தர் பல தவணைகளாக, 4.80 லட்சம் ரூபாயை லாரன்ஸ் ஜோஸ்வாவின் அயனாவரத்தில் உள்ள நிறுவனத்தில் கொடுத்துள்ளார். ஆனால், லாரன்ஸ் ஜோஸ்வா வேலை வாங்கி தராமல் சவுந்தரை ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து விசாரித்த அயனாவரம் போலீசார், லாரன்ஸ் ஜோஸ்வா ஜெபகுமாரை கைது செய்தனர்.