/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பைக்கில் 'லிப்ட்' கொடுத்த பெரம்பூர் நபரிடம் வழிப்பறி
/
பைக்கில் 'லிப்ட்' கொடுத்த பெரம்பூர் நபரிடம் வழிப்பறி
பைக்கில் 'லிப்ட்' கொடுத்த பெரம்பூர் நபரிடம் வழிப்பறி
பைக்கில் 'லிப்ட்' கொடுத்த பெரம்பூர் நபரிடம் வழிப்பறி
ADDED : ஆக 09, 2025 12:33 AM
பெரம்பூர்,
பெரம்பூரில், பைக்கில் 'லிப்ட்' கொடுத்த நபரிடம், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர், ஜெய்பீம் நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முகமது சாதிக், 42. அண்ணா சாலையில் உள்ள வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் பணிபுரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:00 மணியளவில், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பெரம்பூர் வீனஸ் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, வாலிபர் ஒருவர் 'லிப்ட்' கேட்டுள்ளார். முகமது சாதிக்கும் அவரை ஏற்றிக் கொண்டு, அகரம் ஜெகநாதன் தெரு அருகே இறக்கி விட்டார்.
அப்போது அந்த வாலிபர், 'பசியாக உள்ளது; ஏதாவது பணம் கொடுங்கள்' எனக் கேட்டுள்ளார். முகமது சாதிக்கும் பரிதாபப்பட்டு 20 ரூபாய் கொடுத்துள்ளார்.
திடீரென அந்த வாலிபர், முகமது சாதிக்கை கீழே தள்ளி அவரது பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை எடுத்து மாயமானார். அதிர்ச்சி அடைந்த முகமது சாதிக், செம்பியம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.