/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வளர்ப்பு நாய்கள் பதிவு 2ம் கட்ட முகாம் துவக்கம்
/
வளர்ப்பு நாய்கள் பதிவு 2ம் கட்ட முகாம் துவக்கம்
ADDED : நவ 16, 2025 02:33 AM
சென்னை: சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கான இலவச பதிவு மற்றும் தடுப்பூசி முகாம், இரண்டாவது முறையாக இன்று நடக்க உள்ளது.
சென்னையில் புளியந்தோப்பு, திரு.வி.க.நகர், தி.நகர் உள்ளிட்ட ஆறு மாநகராட்சி செல்லப்பிராணி மருத்துவமனைகளில், வளர்ப்பு நாய்களுக்கான இலவச பதிவு மற்றும் தடுப்பூசி முகாம், இன்று நடத்தப்படுகிறது.
கடந்த 9ம் தேதி நடந்த முகாமில் எதிர்பார்த்ததைவிட குறைவானவர்களே பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட முகாம் நடக்கிறது. இதில் காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை முகாம் நடைபெறும்.
நாய்களுக்கான பதிவு நவ., 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன் பின் பதிவு செய்யாத நாயின் உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
சென்னையில் கடந்த 10ம் தேதி வரை நடந்த முகாமில், 260 வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு, மைக்ரோசிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, 3,401 செல்லப் பிராணிகளுக்கான உரிமங்கள் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன.

