ADDED : நவ 16, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார்: அம்பத்துாரில் ரயில்வே தண்டவாளத்தை, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், நேற்று முன்தினம் இரவு மொபைல் போனில் பேசியபடி கடக்க முயன்றார்.
அந்நேரம், ஆவடியில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரயில், அந்நபர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடி ரயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இறந்தவர் குறித்து விசாரிக்கின்றனர்.

