/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'புல்லட்' பைக் திருடன் துாத்துக்குடியில் கைது
/
'புல்லட்' பைக் திருடன் துாத்துக்குடியில் கைது
ADDED : நவ 16, 2025 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிண்டி: கிண்டியில் புல்லட் பைக் திருடி, துாத்துக்குடிக்கு கொண்டு சென்றவரை, போலீசார் கைது செய்தனர்.
கிண்டி, ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன், 26. கடந்த 8ம் தேதி, வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இவரது ராயல் என்பீல்டு 'புல்லட்' திருடு போனது.
கிண்டி போலீசாரின் விசாரணையில், துாத்துக்குடியைச் சேர்ந்த ராமலிங்கம், 35, என்பவர், பைக்கை திருடியது தெரிந்தது.
துாத்துக்குடியில் தலைமறைவாக இருந்த ராமலிங்கத்தை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்தனர். புல்லட் பைக்கும் மீட்கப்பட்டது. பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

