/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா பல்கலை பணி நியமனம் அறிவிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி
/
அண்ணா பல்கலை பணி நியமனம் அறிவிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி
அண்ணா பல்கலை பணி நியமனம் அறிவிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி
அண்ணா பல்கலை பணி நியமனம் அறிவிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 27, 2025 12:15 AM
மதுரை,தமிழ்நாடு எஸ்.சி., - எஸ்.டி., அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்க செயலர் நாகூர்கனி. இவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
சென்னை அண்ணா பல்கலையில், பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குநர் உட்பட, பல்வேறு பணியிடங்களை நிரப்ப, 2020 செப்., 30ல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதில், இட ஒதுக்கீடு, விதிமுறைகளை பின்பற்றவில்லை. அறிவிப்பு சட்டவிரோதமானது. அதை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய கல்வி நிறுவனங்களுக்கான சட்டம், இட ஒதுக்கீடு அடிப்படையில், புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெற்று நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு, 'இது பணியாளர்கள் நியமனம் சம்பந்தப்பட்ட வழக்கு. பொதுநல வழக்காக கருத முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என, உத்தரவிட்டது.