/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரிக்கெட்டில் பெட்ரோலியம் அணி வெற்றி
/
கிரிக்கெட்டில் பெட்ரோலியம் அணி வெற்றி
ADDED : செப் 14, 2025 10:48 PM
சென்னை:தொழிற்சாலைகளுக்கான டி.வி.எஸ்., கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அணி வெற்றி பெற்றது.
திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின், தொழிற்சாலைகளுக்கான டி.வி.எஸ்., லுாகாஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
நேற்று, பட்டாபிராம் இந்து கல்லுாரியில் நடந்த லீக் ஆட்டத்தில், சி.பி.சி.எல்., எனும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் இ.பி.எப்.ஓ., எனும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மோதின.
முதலில் பேட்டிங் செய்த, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அணி, 30 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு, 212 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, 23.4 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 111 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தது.
இதனால், 101 ரன்கள் வித்தியாசத்தில் பெட்ரோலியம் அணி வெற்றி பெற்றது. போட்டிகள் வார, இறுதி நாட்களில் மட்டும் நடக்கின்றன.