sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தாம்பரத்தில் இன்று 2ம் கட்ட குறைதீர் முகாம்

/

தாம்பரத்தில் இன்று 2ம் கட்ட குறைதீர் முகாம்

தாம்பரத்தில் இன்று 2ம் கட்ட குறைதீர் முகாம்

தாம்பரத்தில் இன்று 2ம் கட்ட குறைதீர் முகாம்


ADDED : பிப் 21, 2025 12:10 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம் :தாம்பரம் மாநகராட்சியில், 5 மண்டலங்கள் உள்ளன. இதில், 2, 4 ஆகிய இரண்டு மண்டலங்களுக்கான மக்கள் குறைதீர் சிறப்பு முகாம், கடந்த 13ம் தேதி நடந்தது. தொடர்ந்து, அடுத்த கட்டமாக, 1, 5 ஆகிய மண்டலங்களுக்கான சிறப்பு முகாம், இன்று நடக்கிறது.

ஒன்றாவது மண்டலத்தில் அடங்கிய, 1 - 8, 10 - 12, 29 - 31 ஆகிய வார்டுகளுக்கு, பொழிச்சலுார் சாலை, பம்மல், ஸ்ரீகணேஷ் திருமண மண்டபத்தில், காலை 10:30 மணி முதல் 2:30 மணி வரை முகாம் நடக்கிறது.

ஐந்தாவது மண்டலத்தில் அடங்கிய, 45 - 48, 62 - 70 ஆகிய வார்டுகளுக்கு, வேளச்சேரி சாலை, கிழக்கு தாம்பரம் ஸ்ரீவாசுதேவா திருமண மண்டபத்தில், மாலை 3:30 மணி முதல் 6:30 மணி வரை முகாம் நடக்கிறது.

இதில், நகராட்சி நிர்வாகம், மின் வாரியம், வருவாய், மாற்றுத் திறனாளிகள் நலன், காவல், தொழிலாளர் நலன் உள்ளிட்ட துறைகள் பங்கேற்கின்றன. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us