/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரிய பறவைகளின் புகைப்பட கண்காட்சி
/
அரிய பறவைகளின் புகைப்பட கண்காட்சி
ADDED : நவ 10, 2024 12:38 AM

சென்னை,
கடந்த 12 ஆண்டுகளாக, நாடு முழுதும் சென்று எடுத்த பறவைகளின் படங்களை, புகைப்படக் கலைஞர் அரவிந்த் வெங்கட்ராமன், சென்னை நுங்கம்பாக்கம் ஆர்ட் சென்டரில் கண்காட்சியாக வைத்துள்ளார்.
சில பறவைகள், 15,000 அடிக்கு மேல் தான் வாசம் செய்யும். சில பறவைகள் ராஜஸ்தான் பாலைவனத்தில் மட்டுமே காணப்படும். சில பறவைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே வந்து செல்லும்.
சில பறவைகள் கிராமத்து மக்களின் தெய்வமாக பார்க்கப்படுகிறது. இது போன்ற பறவைகளை தேடி தேடித்தான் பார்க்க வேண்டும். அது மிகவும் சுவராசியமானது.
அப்படி, தேடித் தேடி பார்த்த பறவைகளை, மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். குறிப்பாக மாணவர்களிடம், பறவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, புகைப்படக் கண்காட்சியை ஏற்படுத்தியுள்ளார், புகைப்படக் கலைஞர் அரவிந்த் வெங்கட்ராமன்.
அரவிந்த் மேலும் கூறுகையில், ''பறவைகள் ஒவ்வொன்றும் ஒருவித குணாதிசயம் கொண்டவை. அதன் சூழலை எந்த விதத்திலும் பாதித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்கால தலைமுறைக்காக, இந்த பறவைகளை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.
கண்காட்சியில் 36 படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பறவையின் பெயர், அது இருக்குமிடம், எப்போது போனால் பார்க்கலாம் என்ற விபரத்தையும் எழுதி வைத்துள்ளார். பார்வையாளர்களுக்கு கூடவே இருந்து விளக்கமும் தருகிறார்.
அனுமதி இலவசம்.நேரம் காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது.