/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசிரியையிடம் சீண்டல்: உடற்கல்வி ஆசிரியர் கைது
/
ஆசிரியையிடம் சீண்டல்: உடற்கல்வி ஆசிரியர் கைது
ADDED : ஜன 29, 2025 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி, கொளத்துார் புத்தாகரத்தைச் சேர்ந்த 53 வயது நபர், வியாசர்பாடியில் ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார்.
கடந்த 26ம் தேதி, குடியரசு தின விழா நிகழ்ச்சி முடிந்த பின், மைதானத்தில் இருந்த உபகரணங்களை, பள்ளி அறையில் எடுத்து வைக்கச்சொல்லி, உடன் பணிபுரியும் 41 வயதுடைய பெண் உடற்கல்வி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
பெண் ஆசிரியை, அறையில் உபகரணங்களை வைத்தபோது, பின்தொடர்ந்து சென்ற உடற்கல்வி ஆசிரியர், கதவை உள்பக்கம் தாழிட்டு, பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.
எம்.கே.பி.நகர் போலீசார் உடற்கல்வி ஆசிரியரை கைது செய்தனர்.