/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பியேர் கோப்பை கிரிக்கெட் பத்மா சாரங்கபாணி அணி வெற்றி
/
பியேர் கோப்பை கிரிக்கெட் பத்மா சாரங்கபாணி அணி வெற்றி
பியேர் கோப்பை கிரிக்கெட் பத்மா சாரங்கபாணி அணி வெற்றி
பியேர் கோப்பை கிரிக்கெட் பத்மா சாரங்கபாணி அணி வெற்றி
ADDED : மே 22, 2025 12:09 AM
சென்னை :லிட்டில் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அகாடமி சார்பில், பிரேயர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், புழல் பகுதியில் நடக்கின்றன.
தில், யு - 14 எனும், 14 வயதுக்குட்பட்டோர், யு - 16 எனும் 16 வயதுக்குட்பட்டோருக்கு, தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.
கிளப்களுக்கு இடையிலான இப்போட்டியில், இருபிரிவிலும் மொத்தம் தலா ஐந்து அணிகள், தலா நான்கு போட்டிகள் வீதம் மோதி வருகின்றன.
நேற்று முன்தினம் நடந்த, யு - 14 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த செயின்ட் ஜோசப் சி.ஏ., அணி, 25 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு, 170 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த பத்மா சாரங்கபாணி சி.ஏ., அணி, 23.5 ஓவர்களில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 171 ரன்களை அடித்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில், ஐ - இன்டென்சிட்டி சி.ஏ., அணி, 25 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 150 ரன்களை அடித்தது.
அடுத்து களமிறியங்கிய லிட்டில் மாஸ்டர்ஸ் சி.ஏ., அணி, 20.2 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 76 ரன்களில் சுருண்டது. இதனால், 76 ரன்கள் வித்தியாசத்தில், ஐ - இன்டென்சிட்டி அணி வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.