/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்
/
குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்
குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்
குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்
ADDED : டிச 30, 2025 05:47 AM

சோழிங்கநல்லுார்: ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும்போது, நிலத்திற்கடியில் புதைக்கப்பட்ட பிரதான குழாய்கள் சேதமடைவதால், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. நேற்றும் குழாய் உடைந்து வீணான குடிநீர் சாலையில் தேங்கியுள்ளது. இதை தடுக்க, இரு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில், இ.சி.ஆரில் இருந்து ஓ.எம்.ஆர்., வழியாக, மேடவாக்கம், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி பகுதிகளுக்கு செல்லும் வகையில், 900, 600, 300 எம்.எம்., அளவு உடைய குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதான குழாய்கள், சோழிங்கநல்லுார் சந்திப்பில் இருந்து பிரிந்து செல்கின்றன.
இந்த நிலையில், ஓ.எம்.ஆர்., - மேடவாக்கம் பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும் போது, இந்த குழாய்கள் சேதமடைந்து, குடிநீர் வீணாவது தொடர்ந்து நீடிக்கிறது.
குறிப்பாக, ஒக்கியம்மடு, சோழிங்கநல்லுார், செம்மஞ்சேரி பகுதிகளில் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது. குழாய் சேதமடைந்தால் உடனே குடிநீர் வாரியத்திடம் தெரிவித்து, ஒருங்கிணைந்து குழாய் சேதத்தை சரி செய்ய வேண்டும்.
ஆனால், அதுபோன்று எதுவும் தெரிவிப்பதில்லை என, மெட்ரோ ரயில் ஒப்பந்த நிறுவனம் மீது, குடிநீர் வாரிய அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இரு துறைகள் ஒருங்கிணைந்து, சேதமடைந்த குழாய்களை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என, ஓ.எம்.ஆர் பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கூறினர்.

