/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பள்ளி, அங்கன்வாடிகளை புனரமைக்க திட்டம்
/
பள்ளி, அங்கன்வாடிகளை புனரமைக்க திட்டம்
ADDED : ஜூலை 03, 2025 12:28 AM
பம்மல், தாம்பரம் மாநகராட்சி, ஒன்றாவது மண்டலம், பம்மல் மற்றும் அனகாபுத்துாரில் உள்ள பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டடங்களை, 58 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, ஒன்றாவது மண்டலம், பம்மல் மற்றும் அனகாபுத்துாரில் உள்ள பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டடங்களை, மாணவர்களின் வசதிக்காக புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, பம்மல் மற்றும் அனகாபுத்துாரில் உள்ள பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டடங்களை, 58 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மூங்கில் ஏரி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, பம்மல் பாஸ்கரன் தெரு அங்கன்வாடி, பம்மல் பஜனை கோவில் தெரு அங்கன்வாடி, நாகல்கேணி ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளி ஆகிய கட்டடங்களில், ஓவியம் வரைதல், விளையாட்டு உபகரணங்கள், சுற்றுச்சுவர், கூடுதல் கட்டடம், டைல்ஸ் பதித்தல், குடிநீர் சுத்திகரிப்பு மையம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.